தலைப்புச் செய்திகள்

தற்போதைய செய்திகள்...

துருக்கியில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு ; பயங்கரவாதத்தை ஒடுக்க மனிதகுலம் ஒன்றுபட வேண்டும்...

There was an error in this gadget

Monday, 16 November 2015

துருக்கியில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு ; பயங்கரவாதத்தை ஒடுக்க மனிதகுலம் ஒன்றுபட வேண்டும்...

அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சவூதி உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தல்


அண்டாலியா, நவ.16-
jnizamudeen.blogspot.comபயங்கரவாதத்தை ஒடுக்க உலக அளவில் அனைத்து நாடுகளும்  ஒன்றுபட வேண்டும் என  ஜி20 உச்சி மாநாட்டில் அமெ ரிக்கா, ரஷ்யா, இந்தியா, சவூதி அரேபியா, இந்தோ னேஷியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி உள்ளன. 
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சவூதி அரேபியா உள்ளிட்ட 19 தனிப் பட்ட நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனை உறுப்பு நாடுகளாக கொண்ட பொரு ளாதார அமைப்பு ஜி 20 ஆகும்.
இதன் உச்சி மாநாடு துருக்கி நாட்டின் அண்டா லியா நகரில் வரலாறு காணாத பாதுகாப் புக்கு மத்தியில் 2 நாட் கள் நட்கள் நடைபெறும்    இந்த மாநாடு நேற்று தொடங்கியது. 
இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலால் அந்நாட்டு அதிபர் ஹொலாந்த் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை.
உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ""பயங்கர வாதத்தால் ஏற்பட்டுள்ள துயரம் நம்மைச் சூழ்ந்துள்ள நிலையில் நாம் இங்கு கூடியுள் ளோம். 
பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச அளவில் ஒருங்கி ணைந்த நடவடிக்கை தேவை. இதற்குத்தான் ஜி-20 உச்சி மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 ""ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் இரு மடங் காக அதிகரிக்கப்படும். அப் பாவி மக்களைக் கொல்ல வேண்டும் என்பது திரிக்கப் பட்ட சித்தாந்தம். பயங்கர வாதிகள் நடத்தி வரும் தாக்கு தல்கள் பிரான்ஸ் மீதோ அல்லது துருக்கி மீதோ அல்ல. ஒட்டுமொத்த நாகரிக உலகத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்’ என்றார்.
ஒருங்கிணைந்த பொரு ளாதார வளர்ச்சி, பருவநிலை மாறுபாடு பிரச்னைகள் குறித்து இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாரீஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை குறித்த விவாதம் மாநாட்டில் முக்கியத்துவம் பெற்றது.
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது, தகவல் களைப் பரிமாறிக்கொள் வது, பயங்கரவாத நடவடிக் கைகளுக்கு நிதி செல்வதைத் தடுப்பது என்று மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. ஜி-20 மாநாட்டில் ஏற்கெனவே விவாதிக்க முடிவு செய்யப்பட்ட விஷயங்களில் இருந்து விலகி புதிய தீர்மானம் கொண்டுவரப்பட்டது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
பயங்கரவாத இயக்கங்க ளுக்கு நிதி செல்வதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இதன்படி, ஐஎஸ் உள் ளிட்ட பயங்கரவாத அமைப் புகளுக்கு தனிநபர் நிதி அளிப்பதைத் தடுப்பது, கள்ளச் சந்தையில் பயங்கரவாதிகள் நடத்தும் பெட்ரோலியப் பொருள்களின் விற்பனை யைத் தடுப்பது, புதிய தொழில் நுட்பங்கள், நவீன தகவல்தொடர்பு சாதனங்களை, முக்கியமாக இணையத்தை பயங்கரவாதிகள் பயன்படுத் துவதைத் தடுக்க உடனடி நடவ டிக்கை எடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு இடையே பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. 
இதில், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, பிரேசில் அதிபர் தில்மா ரூசஃப் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
 பாரீஸில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை பிரிக்ஸ் கூட்டமைப்பு ஒன்றிணைந்து வன்மையாகக் கண்டிக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த மனித சமூகமும் ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு இதுவரை இல்லாத அளவில் உலகளாவிய ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம்.
 பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் கடந்த 2011-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இணைந்த பிறகு, ""பிரிக்’ கூட்டமைப்பு, ""பிரிக்ஸ்’ கூட்டமைப்பாக மாறியது.
இந்தக் கூட்டமைப்பு எத்தனை ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்த காலம் உண்டு. ஆனால், சர்வ தேசச் சவால்களை எதிர் கொண்டு, நமது செயல் பாடுகளின் மூலமாக, சர்வதேச அரங்கில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மதிப்பை உயர்த்தி, நமது வளர்ச்சியை நிரூபித் துள்ளோம்.     இவ்வாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment