தலைப்புச் செய்திகள்

தற்போதைய செய்திகள்...

துருக்கியில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு ; பயங்கரவாதத்தை ஒடுக்க மனிதகுலம் ஒன்றுபட வேண்டும்...

There was an error in this gadget

Monday, 16 November 2015

துருக்கியில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு ; பயங்கரவாதத்தை ஒடுக்க மனிதகுலம் ஒன்றுபட வேண்டும்...

அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சவூதி உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தல்


அண்டாலியா, நவ.16-
jnizamudeen.blogspot.comபயங்கரவாதத்தை ஒடுக்க உலக அளவில் அனைத்து நாடுகளும்  ஒன்றுபட வேண்டும் என  ஜி20 உச்சி மாநாட்டில் அமெ ரிக்கா, ரஷ்யா, இந்தியா, சவூதி அரேபியா, இந்தோ னேஷியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி உள்ளன. 
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சவூதி அரேபியா உள்ளிட்ட 19 தனிப் பட்ட நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனை உறுப்பு நாடுகளாக கொண்ட பொரு ளாதார அமைப்பு ஜி 20 ஆகும்.
இதன் உச்சி மாநாடு துருக்கி நாட்டின் அண்டா லியா நகரில் வரலாறு காணாத பாதுகாப் புக்கு மத்தியில் 2 நாட் கள் நட்கள் நடைபெறும்    இந்த மாநாடு நேற்று தொடங்கியது. 
இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலால் அந்நாட்டு அதிபர் ஹொலாந்த் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை.
உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ""பயங்கர வாதத்தால் ஏற்பட்டுள்ள துயரம் நம்மைச் சூழ்ந்துள்ள நிலையில் நாம் இங்கு கூடியுள் ளோம். 
பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச அளவில் ஒருங்கி ணைந்த நடவடிக்கை தேவை. இதற்குத்தான் ஜி-20 உச்சி மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 ""ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் இரு மடங் காக அதிகரிக்கப்படும். அப் பாவி மக்களைக் கொல்ல வேண்டும் என்பது திரிக்கப் பட்ட சித்தாந்தம். பயங்கர வாதிகள் நடத்தி வரும் தாக்கு தல்கள் பிரான்ஸ் மீதோ அல்லது துருக்கி மீதோ அல்ல. ஒட்டுமொத்த நாகரிக உலகத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்’ என்றார்.
ஒருங்கிணைந்த பொரு ளாதார வளர்ச்சி, பருவநிலை மாறுபாடு பிரச்னைகள் குறித்து இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாரீஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை குறித்த விவாதம் மாநாட்டில் முக்கியத்துவம் பெற்றது.
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது, தகவல் களைப் பரிமாறிக்கொள் வது, பயங்கரவாத நடவடிக் கைகளுக்கு நிதி செல்வதைத் தடுப்பது என்று மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. ஜி-20 மாநாட்டில் ஏற்கெனவே விவாதிக்க முடிவு செய்யப்பட்ட விஷயங்களில் இருந்து விலகி புதிய தீர்மானம் கொண்டுவரப்பட்டது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
பயங்கரவாத இயக்கங்க ளுக்கு நிதி செல்வதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இதன்படி, ஐஎஸ் உள் ளிட்ட பயங்கரவாத அமைப் புகளுக்கு தனிநபர் நிதி அளிப்பதைத் தடுப்பது, கள்ளச் சந்தையில் பயங்கரவாதிகள் நடத்தும் பெட்ரோலியப் பொருள்களின் விற்பனை யைத் தடுப்பது, புதிய தொழில் நுட்பங்கள், நவீன தகவல்தொடர்பு சாதனங்களை, முக்கியமாக இணையத்தை பயங்கரவாதிகள் பயன்படுத் துவதைத் தடுக்க உடனடி நடவ டிக்கை எடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு இடையே பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. 
இதில், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, பிரேசில் அதிபர் தில்மா ரூசஃப் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
 பாரீஸில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை பிரிக்ஸ் கூட்டமைப்பு ஒன்றிணைந்து வன்மையாகக் கண்டிக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த மனித சமூகமும் ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு இதுவரை இல்லாத அளவில் உலகளாவிய ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம்.
 பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் கடந்த 2011-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இணைந்த பிறகு, ""பிரிக்’ கூட்டமைப்பு, ""பிரிக்ஸ்’ கூட்டமைப்பாக மாறியது.
இந்தக் கூட்டமைப்பு எத்தனை ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்த காலம் உண்டு. ஆனால், சர்வ தேசச் சவால்களை எதிர் கொண்டு, நமது செயல் பாடுகளின் மூலமாக, சர்வதேச அரங்கில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மதிப்பை உயர்த்தி, நமது வளர்ச்சியை நிரூபித் துள்ளோம்.     இவ்வாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Saturday, 21 December 2013

பென்ஷன் பணம் கேட்டு பாலியல் தொழிலாளர்கள் வழக்கு !

JNIZAMUDEEN.BLOGSPOT.COM

22 டிசம்பர் 2013
நெதர்லாந்தில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்து கொண்ட பாலியல் தொழிலாளர்கள் வரி கட்டவேண்டும். அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்படுகிறது.ஆனால் அது போதவில்லை என்பதுடன் தங்களுக்கு கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அதே மாதிரியான பென்சன் சலுகைகளும் உரிமைகளும் வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

நெதர்லாந்து நாட்டில் கால்பந்து விளையாட்டு வீரர்கள் தங்கள் ஓய்வூதியத் திட்டங்களில் ஒரு மாதத்துக்கு 5,000 யூரோக்கள் வரை வருமான வரி விலக்குடன் போட்டுவைக்கலாம். நெதர்லாந்தில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்து கொண்ட பாலியல் தொழிலாளர்கள் வரி கட்டவேண்டும். அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்படுகிறது.ஆனால் அது போதவில்லை.

ஆகவே பாலியல் தொழிலாளர்களும், கால்பந்து விளையாட்டு வீரர்களைப் போலவே தங்களது ஓய்வூதிய திட்டத்தில் சேமிக்க வரிவிலக்கு கேட்டு வருகின்றனர்.பாலியல் தொழிலாளர்களும், கால்பந்து விளையாட்டு வீரர்களைப் போலவே, தங்களது இளமையில், கடுமையான உடல் சார்ந்த உழைப்பில் ஈடுபடுகிறார்கள், அவர்களது தொழிலும், அதிக காலம் நீடிப்பதில்லை என்று அவர்களின் வழக்கறிஞர்கள் வாதிடுகிறார்கள்.






Tuesday, 17 December 2013

ஸ்டெம் செல்களை கொண்டு சிறுநீரகம் உருவாக்கிய விஞ்ஞானிகள்!


jnizamudeen.blogspot.com
   18  டிசம்பர் 2013
 ஸ்டெம் செல்களிலிருந்து சிறுநீரகத்தை உருவாக்கியுள்ளதாக ஆஸ்ரேலிய  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது சிறுநீரக நோய் சம்பந்தமான பிரச்னைகளுக்கு மிகப்பெரிய தீர்வாக அமையும். மேலும், சிறுநீரக பாதிப்பால் உயிரிழக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு மறுவாழ்வு அளிக்கும் அற்புதமான கண்டுபிடிப்பாக இது கருதப்படுகிறது. இதுகுறித்து குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியியல் ஆய்வு நிறுவனப் பேராசிரியர் மெலிஸா லிட்டில் கூறியதாவது:

    ஸ்டெம் செல்கள் தம்மைத்தாமே சிறிய வடிவிலான சிறுநீரகமாக மாற்றிக் கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தை எங்களது குழு கண்டுபிடித்துள்ளது.இந்த சுய அமைப்பின்போது, பல்வேறு வகையான செல்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு முக்கியமான உறுப்பாக தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளும். இந்த ஆராய்ச்சியில் அவை தங்களை சிறுநீரகமாக மாற்றிக் கொள்கின்றன. ஆய்வக சோதனைகளின்போது, ஸ்டெம் செல்கள் இதுபோல தங்களை சுய வடிவமைப்பு செய்து கொள்ளுமேயானால், சேதமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட உறுப்புகளையும், திசுக்களையும் திசு உயிரியியல் துறை மூலம் எதிர்காலத்தில் மாற்றி அமைக்க முடியும்.


   மருந்துகளால் மனிதனின் சிறுநீரகம், இருதயம், கல்லீரல் ஆகிய மூன்று உறுப்புகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றன. இதில் எந்த மருந்து சிறுநீரகத்தை பாதிக்கிறது என்பதை இந்த ஸ்டெம் செல்களிலிருந்து உருவாக்கப்பட்ட சிறுநீரகம் மூலம் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து விடலாம். இதனால் தேவையற்ற செலவுகள் தவிர்க்கப்படும். சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளில் நான்கு பேரில் ஒருவர் மட்டுமே உறுப்பை தானமாகப் பெறுகிறார். இதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. மற்றவர்கள் ரத்த சுத்திகரிப்பு செய்கின்றனர். இந்த சிக்கலான சூழ்நிலையிலிருந்து நோயாளிகளை மீட்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம் என்று மெலிஸா லிட்டில் கூறினார்.

     குயின்ஸ்லாந்து அறிவியல் துறை அமைச்சர் அயன் வாக்கர் கூறுகையில், "மூலக்கூறு உயிரியியல் ஆய்வு நிறுவனக் குழுவின் கண்டுபிடிப்பு சிறுநீரக மருத்துவத்துறையில் ஒரு மைல்கல்லாகும்' என்றார்.

Tuesday, 26 March 2013

ஊழல் மட்டும் இல்லிங்க போதை பொருள் ஹெராயின் விற்பனையிலும் இந்திய தான் முதலிடம்:-ஐ.நா.அறிக்கை

 jnizamudeen.blogspot.com
26 மார்ச் 2013,அமெரிக்கா
தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவிலேயே  ஹெராயின் விற்பனை அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐ.நா.வுக்கான போதை மருந்து கடத்தல் மற்றும் குற்றம் தொடர்பான 2011ஆம் ஆண்டு அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.தென்கிழக்கு ஆசியாவில் வருடத்திற்கு  1.9 பில்லியன் டொலர் அளவுக்கு ஹெராயின்  போதை பொருள்  விற்பனை நடைபெறுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் இந்தியாவின் அதிகபட்சமாக 1.4 பில்லியன் டொலர் அளவுக்கு விற்பனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை சீனாவிலும், பாகிஸ்தானிலும் தான் ஹெராயினை நுகர்வர்கள் அதிகம் உள்ளனர். இதற்கு அடுத்ததாக ஈரானில் உள்ளனர். யு.என்.ஓ.டி.சி அமைப்பு நடத்திய ஆய்வில்  கடந்த 2009-ம் ஆண்டில் உலக அளவில் 149 முதல் 203 மில்லியன் மக்கள் போதை மருந்தினை உபயோகப்படுத்தியுள்ளனர். இதே போன்று மெராக்கோ, லெபனான், நேபாள் ஆகிய நாடுகளில் ஹாஸிஸ் எனும் போதை மருந்து விற்பனை அதிகரித்து வருகிறது. தவிர கோகைன் போன்றவைகளும் ஆசிய சந்தையில் பெருகிவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பைசா செலவு இல்லாமல் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?

jnizamudeen.blogspot.com
26 மார்ச் 2013
காதலியை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று அவருக்காக செலவு செய்வது இயற்கையானது தான். ஆனால் அவ்வாறு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போது சில சமயங்களில் பணம் இருக்காது. ஏனெனில் ஏற்கனவே, அவர்களை அழைத்துச் சென்றதால், அனைத்து பணமும் செலவாகிவிட்டிருக்கும். எனவே எப்போதும் அவர்களை வெளியே அழைத்து செல்லும் போது, அதிகமாக செலவாகாமல், ஆனால் நன்கு என்ஜாய் பண்ண வேண்டும் என்று நினைத்தால், இப்போது சற்று புதுமையாக யோசித்தால், நிச்சயம் சந்தோஷத்துடன், கையில் இருக்கும் பணத்தையும் சேமிக்க முடியும்.இதற்காக கஞ்சமாக இருக்க வேண்டியதில்லை.ஒருசில வித்தியாசமான யோசனைகள் இருந்தாலே, நன்றாக ஊர் சுற்ற முடியும். இப்போது அவ்வாறு உங்கள் காதலியுடன் குறைந்த செலவில் ஊர் சுற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சில டிப்ஸ்களை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர். அதாவது, எந்த மாதிரியான செயல்கள் அல்லது இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம் என்று சில யோசனைகளை கூறுகின்றனர். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதை கேட்டு தெரிந்து கொண்டு  உங்கள் காதலியுடன் உல்லாசமாக இருங்கள்.






நோ ......... நோ .......... திட்டக்கூடாது ........